‘தி இந்து’ ‘சரிகம’ எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது: மியூசிக் அகாடமியில் இன்று மண்டல இறுதிச்சுற்று போட்டி

‘தி இந்து’ ‘சரிகம’ எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது: மியூசிக் அகாடமியில் இன்று மண்டல இறுதிச்சுற்று போட்டி
Updated on
1 min read

‘தி இந்து’ மற்றும் ‘சரிகம’ இணைந்து வழங்கும் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது - 2016’ பாட்டுப் போட்டிக் காக சென்னை மண்டல அளவிலான இறுதிச்சுற்று, மியூசிக் அகாடமியில் இன்று மாலை நடக்க உள்ளது.

புகழ்பெற்ற கர்னாடக இசை மேதையான எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் போற்றும் வகையில் இளம் கர்னாடக இசைப் பாடகர்களுக்கு ‘தி இந்து’ மற்றும் ‘சரிகம’ இணைந்து ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ‘தி இந்து’ மற்றும் ‘சரிகம’ இணைந்து ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது - 2016’ போட்டியை நடத்துகின்றன.

இந்த விருதுக்கான சென்னை மண்டல அளவிலான இறுதிச்சுற்றுப் போட்டி சென்னை மியூசிக் அகாடமியில் உள்ள சிற்றரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கவுள்ளது. இதில் எஸ்.ஸ்ரீவத்ஸன், எஸ்.ஸ்ரீவர்ஷா, சி.ஸ்வாதி, மதுரை என்.சிவகணேஷ், ஆர்.சாய் விக்னேஷ், ஆர்.கார்த்திக் பங்கேற்றுப் பாடுகின்றனர்.

இப்போட்டிக்கு டாக்டர் கே.கிருஷ்ணகுமார், எஸ்.ராஜேஸ்வரி, ராஜ்குமார் பாரதி ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

சென்னை மண்டல அளவில் நடக்கும் இந்த இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் நபர், சென்னையில் நவம்பர் 13-ம் தேதி நடக்கவுள்ள ஒட்டுமொத்த இறுதிப்போட்டியில் கலந்து கொள்வார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in