

சென்னை அருகே கிளாம்பாக்கத் தில் பேருந்து முனையம் அமைக்க தேவையான வடிவமைப்பு குறித்து வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறையின் செயல் பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து வீட்டு வசதித் துறை அமைச் சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அப்போது அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 44 ஆயிரத்து 185 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள் ளது. தற்போது 18 ஆயிரத்து 390 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மற்ற பணிகளை துரிதமாகச் செயல்படுத்தும்படி துறை அதி காரிகளை அமைச்சர் அறி வுறுத்தினார்.
மேலும், தென்மாவட்டங் களுக்குச் செல்லும் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய வசதியாக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தேவைப்படும் நிலத்தை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு வருவாய்த்துறை வழங்கியுள்ளது. இப்பேருந்து முனையம் அமைக்கத் தேவை யான வடிவமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.
சாத்தங்காட்டில்..
சாத்தங்காட்டில் கனரக வாகன நிறுத்த முனையம் அமைப்பது, கோயம்பேட்டில் உள்ள காய்கனி, மலர் அங்காடிகளை முறைப் படுத்துவது, அங்காடிக்கு உள்ளே யும், வெளியேயும் போக்கு வரத்தை சீர்செய்வது, லாயிட்ஸ் காலனி பகுதி-1-ல் உள்ள குடி யிருப்பை இடித்துவிட்டு பன் னடுக்கு மாடி குடியிருப்பு கட்டு வது, மதுரை மாவட்டம், தோப்பூர்-உச்சப்பட்டியில் நடைபெறும் துணைகோள் நகர் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்துவது ஆகியன பற்றியும் அமைச்சர் விரிவாக ஆலோசனை நடத்தினார்