புதுச்சேரியில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்: மொத்த வாக்காளர்களில் 10%

புதுச்சேரியில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்: மொத்த வாக்காளர்களில் 10%
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச.16) வெளியிடப்பட்டது.

அதன்படி, புதுச்சேரி மாவட்டத்தில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளதாகவும், 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி புதுச்சேரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவரது அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.

அதன்படி புதுச்சேரி மாவட்டத்தில் 8,51,775 மொத்த வாக்காளர்கள் உள்ளனர், இதில் ஆண்கள் 3,99,771, நபர்களும் பெண்கள் 4,51,869 நபர்களும் மூன்றாம் பாலினம் 135 பேரும் உள்ளனர். மேலும் இறப்பு, நிரந்தரமாக, குடிபெயர்ந்த, இரட்டை வாக்காளர் என 85,531 நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 10.04% ஆகும்.

இதுதொடர்பாக ஆட்சியர் குலோத்துங்கன் கூறுகையில், "புதுச்சேரியில் 16,171 வாக்காளர்கள் மரணம் அடைந்துவிட்டனர். 45 ஆயிரத்து 312 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டனர். 22,077 பேர் வாக்காளர்கள் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாதவர்கள். 1,627 வாக்காளர்கள் ஏற்கனவே வேறு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் இடம் பெற்றுள்ளார்கள். 344 வாக்காளர்கள் வேறு காரணங்களாக நீக்கப்பட்டனர்.

வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டுள்ளது வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால் இன்று முதல் ஜனவரி 15-ம் தேதி வரை உரிமை கோரல் செய்ய முடியும். தவறான வாக்காளர் சேர்க்கப்பட்டிருந்தால் ஜனவரி 15-ம் தேதி வரை மறுப்பு தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்: மொத்த வாக்காளர்களில் 10%
இயற்கை வேளாண்மையில் வெற்றி பெற பலவகை சாகுபடி அவசியம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in