

ரமேஷ் சுப்பிரமணியன்
காஞ்சிபுரம் வேலாயுதம் நகரில் வசிப்பவர் ரமேஷ் சுப்பிரமணியன் (58). இவர் காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி நித்யா. மகன் குருதேவ் கனடாவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
டிப்ளமோ முடித்துவிட்டு பல ஆண்டுகளாகக் கட்டிடப் பொறியாளராகப் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றிய ரமேஷ், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பணியை விட்டு விலகி, இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினார்.
தனது தோட்டத்தில், 5 ஏக்கரில் வேர்க்கடலை, எள், உளுந்து, நெல், கத்தரிக்காய், தக்காளி, பீர்க்கங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மற்றும் பயறு வகைகளைப் பயிரிட்டு வருகிறார். தூயமல்லி, குள்ளக்கார் போன்ற பாரம்பரிய நெல் வகைகளையும் அவர் சாகுபடி செய்கிறார்.