சானடோரியத்தில் முன்பதிவு கவுன்ட்டர்கள் திறப்பு

சானடோரியத்தில் முன்பதிவு கவுன்ட்டர்கள் திறப்பு
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை முன் னிட்டு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான முன்பதிவு கவுன்ட்டர்கள் தாம்பரத் தில் செயல்பட தொடங்கியது.

தீபாவளியை முன்னிட்டு வரும் 26, 27, 28-ம் தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக தற் காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் தாம்பரம் சானடோரியம் அண்ணா பேருந்து நிலையமும் ஒன்று. இங்கிருந்து திண்டிவனம், விக்கிர வாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் முன்பதிவு மையம் திறக்கப்பட்டு பயணச்சீட்டு முன் பதிவு தொடங்கியது. தாம் பரத்தில் ஏற்கெனவே முன்பதிவு செய்யும் மையம் உள்ளது. இருப்பினும் கூடுதலாக மையம் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in