

தாய் மற்றும் குழந்தை நலன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் நலனுக்காக நிதி திரட்டும் நோக்கத்துடன் மீனம்பாக்கம் பகுதி ரோட்டரி சங்கம் சார்பில் ‘விசில் போடு' நிகழ்ச்சி மியூசிக் அகாடமியில் இம்மாதம் 16-ம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
மீனம்பாக்கம் பகுதி ரோட்டரி சங்கம் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 33 ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தாய் மற்றும் குழந்தை நலன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் நலனுக்காக நிதி திரட்ட ‘விசில் போடு' நிகழ்ச்சியை நடத்துகிறது. இது குறித்த செய்திக் குறிப்பு:
உலக அளவில் சாதனை புரிந்த ஸ்வேதா சுரேஷ், ஜெகத் தர்காஸ் ஆகியோர் நாட்டிலேயே முதல் முறையாக விசில் மூலம் நேரடியாக கச்சேரி நடத்துகின்றனர். 2 மணி நேரத்துக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும். ‘படையப்பா’ திரைப்படத்தில் வருவது போன்ற நடன நிகழ்ச்சியும் இதில் இடம்பெறும். கோலிவுட், பாலிவுட் திரைப்படப் பாடல்களையும், கிஷோர், ரஃபி, முகேஷ் உள்ளிட்ட பழைய பாடகர்கள் பாடிய பாடல்களையும் ஜெகத் விசில் மூலம் வழங்க உள்ளார்.
நிகழ்ச்சியின்போது பார்வை யாளர்களிடம் பல்வேறு கேள்வி கள் கேட்கப்பட்டு வெற்றி பெறு பவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படும்.
நன்கொடையாளர் டிக்கெட்கள் ரூ.1000, ரூ.750, ரூ.500, ரூ.300 ஆகிய விலைகளில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு 9840816501, 9841023644 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.