அமைச்சர் கார் மீது காலணி வீச்சு விவகாரம்: பாஜகவினர் மன்னிப்பு கோர உத்தரவு 

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு விவகாரம்: பாஜகவினர் மன்னிப்பு கோர உத்தரவு 
Updated on
1 min read

மதுரை: மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜகவினர் 3 பேரின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவினர் மன்னிப்பு கோர நீதிபதி உத்தரவிட்டார்.

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த குமார், பாலா, கோபிநாத், மற்றொரு கோபிநாத், ஜெயகர்ணா, முகமது யாகூப், தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை என 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மதுரை விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, மனுதாரர்கள் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும். தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in