கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி
Updated on
1 min read

மதுரை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த மாதம் மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐ பெரியசாமி, அதனைத் தொடர்ந்து ஓய்வில் இல்லாமல் செஸ் ஒலிம்பியாட் போட்டி, அமைச்சரவை கூட்டம், மாவட்டத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வத்தலகுண்டில், அவரது உறவினர் மரணமடைந்ததை தொடர்ந்து துக்க நிகழ்வில் பங்கேற்றார். அங்கு வெயிலில் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றார். இதனால் ஓய்வில்லாமல் இருந்த அமைச்சர் ஐ பெரியசாமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.தொடர்ந்து காய்ச்சல் அதிகமாகவே மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமைச்சர் ஐ.பெரியசாமி அனுமதிக்கப்பட்டார்.

அவரை மருத்துவமனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். பூரண குணமடைந்த ஐ.பெரியசாமி சனிக்கிழமை வீட்டிற்கு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in