அதிமுக வேட்பாளராக காஞ்சி நகராட்சி வார்டுக்கு சங்கரராமன் மகள் போட்டி

அதிமுக வேட்பாளராக காஞ்சி நகராட்சி வார்டுக்கு சங்கரராமன் மகள் போட்டி
Updated on
1 min read

கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மகள் மைத்ரேயி, அதிமுக சார்பில் காஞ்சிபுரம் நகராட்சியின் 40-வது வார்டில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக பணியாற்றி வந்த சங்கரராமன், கடந்த 2004-ம் ஆண்டு கூலிப் படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் சங்கரராமனின் மகள் மைத்ரேயி, காஞ்சிபுரம் நகராட்சியின் 40-வது வார்டில் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in