Published : 16 Aug 2022 07:02 AM
Last Updated : 16 Aug 2022 07:02 AM

கனல் கண்ணன் கைதை கண்டித்து இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: கனல் கண்ணன் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசின் தொடரும் இந்து விரோத பாரபட்சஅணுகுமுறை மக்கள் மனதில் மிகப்பெரும் கோபத்தை உருவாக்கி வருகிறது. கருத்துரிமையின் குரல்வளையை நெரிக்கும் தமிழக அரசைகண்டித்து 16-ம் தேதி காலை 11 மணியளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x