

காவிரி நதிநீர் பிரச்சினையைத் தொடர்ந்து தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே கடந்த 29-வது நாட்களாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள் ளது. தமிழக அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையான ஜூஜூவாடி வரையிலும், கர்நாடக பேருந்துகள் அம்மாநில எல்லையான அத்திப் பள்ளி வரையிலும் இயக்கப்படு கின்றன.
தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கர்நாடகா செல்ல வும், கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழகம் வரவும் இரு மாநில போலீஸார் தடை விதித் துள்ளனர். இதற்காக, தமிழக போலீ ஸார் ஓசூர் ஜூஜூவாடி, வட்ட சாலை உட்பட மாநில எல்லைகள் சந்திக்கும் இடங்களில் கண்காணிப் புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கர்நாடக மாநில போலீ ஸாரும் அந்த மாநில எல்லையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இரு மாநிலங்களிடையே அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் ஜூஜூவாடி - அத்திப் பள்ளி இடையே சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அகதிகளைப்போல், தலையில் சுமைகளுடன் நடந்தே சென்று வருகின்றனர்.
கர்நாடகா வழியாக தமிழகத் துக்கு வரும் பிற மாநில பதி வெண் கொண்ட ஆம்னி பேருந்து கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை, தமிழக - கர்நாடக போலீஸார் அனுமதித்து வருகின்ற னர். அவ்வாறு வரும் ஆம்னி பேருந்துகளை அத்திப்பள்ளியில் நிறுத்தும் கர்நாடக போலீஸார், ஆவணங்களை சரி பார்க்க வேண் டும் எனக் கூறி ஒரு மணி நேரத்துக்கு மேல் நிறுத்தி விடுகின்றனர். வாகனங்களைப் பொறுத்து ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை வசூல் செய்த பின்னரே எல்லையைக் கடந்து செல்ல அனுமதி வழங்குகின்றனர்.
அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடியில் தமிழக போலீஸார் ஆம்னி பேருந்துகளை நிறுத்துகின்றனர். இங்கும் ஆவணங்கள் சரிபார்க்கும் படலம் தொடர்ந்து, வசூலில் முடிகிறது என்று பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனால், பேருந்தில் உள்ள பயணிகளுக்கு மன உளைச்சலும் நேர விரயமும் ஏற்படுகிறது. எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள அசவுகரிய சூழலை பயன்படுத்திக்கொண்டு கெடுபிடி யாக மக்களுக்கு பல்வேறு சிரமங் களை போலீஸார் ஏற்படுத்தி வருவ தாக குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி, வழக்கு விசாரணைக்காக தமிழகம் வந்த சீருடை அணியாத கர்நாடக போலீஸாரை, தமிழக போலீஸார் எல்லைக்குள் அனு மதிக்கவில்லை. இதனால், இரு மாநில போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கர்நாடக போலீஸார், அத்திப்பள்ளி அருகே சென்ற 20-க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் கொண்ட வாகனங் களின் கண்ணாடிகளையும், மக்க ளில் சிலரையும் தாக்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
பதற்றமான சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாது காப்புப் பணியில் ஈடுபடும் போலீ ஸாரே பதற்றத்தை ஏற்படுத்தி மக்களை அச்சப்பட வைக்கும் சம்பவங்களும் தொடர்கிறது.