

புதுச்சேரி: புதுச்சேரியில் குப்பைகளை தரம் பிரித்து, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் இயந்திரம் மூலம் அரவை செய்யப்பட்டு, அக்கழிவுகள் சிமென்ட் உற்பத்திதொழிற்சாலைகளுக்கு அனுப்பப் படுகிறது. இதுவரை 21 டன் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து, மக்காத குப்பைக் கழிவுகளை மேலாண்மை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி சுகா தார அதிகாரி துளசிராமன் கூறியது: புதுச்சேரி நகராட்சி பகுதியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், தற்போது தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் குருமாம்பேட் குப்பை கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மக் காத பிளாஸ்டிக் குப்பைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சுகாதாரப் பூங்கா மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கு மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் இயந்திரம் மூலம் அரவைசெய்யப்பட்டு, அந்த துகள்கள்சிமென்ட் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் மூலம் நகரில் குப்பைகள் தேங்குவது தவிர்க்கப்படும். இந்தபசுமை பாதுகாப்பு மையம் கடந்த6 மாதங்களாக தொடங்கி செயல்படு கிறது. இங்கு 50 ஊழியர்கள் வரை பணியாற்றுகின்றனர். தனியார் நிறுவன பங்களிப்புடன் இப்பணிகள் தற்போது நடைபெறுகின்றன.
இதுவரை 21 டன் அளவிலான மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, அரவை செய்து சிமென்ட்தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, குப்பைகள் வீடுகளில் சேகரிக்கப்பட்டு, இந்த மையம் மூலம் மக்காத பிளாஸ்டிக் போன்ற குப்பைகள் இறுதியாக அழிக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படும். இதர நகராட்சிகளிலும் இம்முறை விரி வாக்கம் செய்யப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.