பாம்பன் அருகே மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய 800 கிலோ திருக்கை மீன்

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய சங்குவாயன் திருக்கை மீன்.
பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய சங்குவாயன் திருக்கை மீன்.
Updated on
1 min read

ராமேசுவரம்: பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் 800 கிலோ திருக்கை மீன் சிக்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த ஒரு வார காலத் துக்கும் மேலாக பலத்த காற்று, கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் தனுஷ்கோடி, ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பாம்பன் விசைப் படகு மீனவர்கள் மீன்வளத் துறையி னரிடம் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றனர்.

இதில் ஒரு விசைப்படகில் சென்ற மீனவர்களின் வலையில் 800 கிலோ ராட்சத சங்குவாயன் திருக்கை மீன் சிக்கியது. 20 அடி நீளம், 15 அடி அகலம் கொண்டதாக இருந்தது.

அந்த திருக்கை மீனை மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கடல்சார் ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்கள் மற்றும் மீன்வளத் துறையினர் ஆய்வு செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in