8-வது ஊதியக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்

8-வது ஊதியக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நிறை வேற்ற தமிழக அரசு 8-வது ஊதியக் குழுவை அமைக்க வேண் டும் என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உட்பட அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி யுள்ளன.

அரசு ஊழியர்கள், ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்துக்கு தமிழ்நாடு தலை மைச் செயலக சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழக முதல்வர் பூரண நலன் பெற்று விரைவில் மக்கள் பணியை தொடர, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கு 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கும் வகையில், உடனடியாக 8-வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும்.

தீர்மானங்கள்

கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களும் பழைய ஓய்வூ திய திட்டத்தில் தொடர பரிந்துரை கள் வழங்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, தன் அறிக் கையை விரைவில் முதல்வரிடம் அளிக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இத்தீர்மானங்களை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் மற்றும் இதில் பங்கேற்ற அமைப்புகளின் சார்பில் தமிழக தலைமைச் செயலரை சந்தித்து அளிக்க முடிவெடுக்கப்பட்டுள் ளது. இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் நேரம் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in