

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பர வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இரு அரசர்களிடையேயான போர்க்களக் காட்சியை உருவகப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு ‘சதுரங்க நடன சித்தரிப்பு’ எனப் பெயரிடப்பட்டது.
செஸ் பலகையில் செவ்வியல் மற்றும் கிராமிய நடன அம்சங்களுடன் மல்யுத்தக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இறுதியில் மீசை முறுக்கிய மன்னரை, தனது வாள் வீச்சுத் திறனால் ‘செக்’ வைத்து நிறுத்துகிறார் எதிரணியின் ராணி. உரையாடல் எதுவுமின்றி பின்னணி இசையுடன் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3.38 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ, தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் பகிரப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவை, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கலைத் துறையில்ஆர்வம் கொண்ட புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவின் முயற்சியில், இந்த வீடியோவை குறும்படங்களில் நிபுணத்துவம் கொண்ட குழுவினர் படமாக்கியுள்ளனர்.
வீடியோவை முதல்வர் பகிர்ந்த இந்த பதிவில் காணலாம்: