“ஆடி கிருத்திகை... முருகப்பெருமானின் அருள் கிடைக்க பிரார்த்திப்போம்” - பிரதமர் மோடி

“ஆடி கிருத்திகை... முருகப்பெருமானின் அருள் கிடைக்க பிரார்த்திப்போம்” - பிரதமர் மோடி
Updated on
1 min read

சென்னை: “முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம்” என்று ஆடி கிருத்திகையை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆடி கிருத்திகையை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆடி கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in