

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பைக் மீதுலாரி மோதியதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காஞ்சிபுரம், வேளிங்கபட்டரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(59). இவர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும், அசோக்குமார், ஆனந்த் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
இவர் நேற்று காலை 9.15மணிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்துக்கு பணிக்குச் செல்லும்போது வேலூர்,சென்னை சாலையில் சின்னையன் சத்திரம் அருகே பின்னால் வந்தடிப்பர் லாரி பக்கவாட்டில் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகன் தலைமீது லாரி சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் சிவகிரிப்பட்டியில் காவல் துறையினரின் மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.