குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு: இபிஎஸ்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு: இபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு முழு ஆதரவளிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் 6.8.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு அதிமுக ஆதரவு கோரி, அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் என்னிடம் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாக கூரியிருந்தேன்.

அதன்படி, இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்ததன்பேரில், இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு அதிமுக தனது முழு ஆதரவை அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in