செங்கல்பட்டு | சிவசங்கர் பாபா ஆக. 10-ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

செங்கல்பட்டு | சிவசங்கர் பாபா ஆக. 10-ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு
Updated on
1 min read

செங்கல்பட்டு: கேளம்பாக்கம் அருகேயுள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான புகார் தொடர்பாக, தமிழக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு அவர் மீது எட்டு வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, நிபந்தனையுடன் ஜாமீன்பெற்று சிவசங்கர் பாபா வெளியில் வந்தார். இந்நிலையில், விசாரணைக்காக அவர் நேற்றுசெங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி தமிழரசி, மீண்டும் ஆக. 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in