மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி சுட்டதால் பரபரப்பு  

மதுரை விமான நிலையம்.
மதுரை விமான நிலையம்.
Updated on
1 min read

மதுரை: மதுரை விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் முக்கியமானது மதுரை விமான நிலையம். இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணி புரிகின்றனர். இவர்களுக்கான பணி முடிந்தபின், ஆயுத பாதுகாப்பு கட்டிடத்தில் அவரவர் பயன் படுத்திய துப்பாக்கியை ஒப்படைப்பது வழக்கம்.

இதன்படி, நேற்றுமுன்தினம் இரவு பணி முடித்த ஆய்வாளர் துருவ்குமார் ராய், 9 எம்எம் தோட்டா வகை கொண்ட துப்பாக்கியை ஒப்படைத்தார். அப்போது அந்த துப்பாக்கி எதிர்பாராதவிதமாக தானாகவே வெடித்தது.

இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாணடன்ட் உமா மகேஸ்வரன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். மேலும், துப்பாக்கி வெடித்தது குறித்து துறைரீதியான விசாரணை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in