Published : 11 Jul 2022 07:19 AM
Last Updated : 11 Jul 2022 07:19 AM

ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டதே ஆரியம், திராவிடம்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

வேலூர் சிப்பாய் புரட்சியின் 216-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று வேலூர் மக்கான் சிக்னல் பகுதியில் உள்ள நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர்: ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டதுதான் ஆரியமும், திராவிடமும். அது இனம் சார்ந்தது அல்ல, இடம் சார்ந்தது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

1806-ம் ஆண்டு ஜூலை 10-ம்தேதி வேலூர் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிராக சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 10-ம் தேதி வேலூரில் சிப்பாய் புரட்சி தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, வேலூர் சிப்பாய் புரட்சியின் 216-வது ஆண்டு நினைவு தினம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, வேலூர் மக்கான் சிக்னல் பகுதியில் உள்ள சிப்பாய் நினைவுத் தூணுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து நேற்று மரியாதை செலுத்தினார். பிறகு, கோட்டை வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார்.

அப்போது, அவர் பேசும்போது, ‘‘ஆரியம், திராவிடம் என்பது இனம் சார்ந்தது அல்ல. அது இடம் சார்ந்தது மட்டும்தான். விந்திய மலைக்கு வடக்கில் உள்ளோரை ஆரியர்கள் என்றும், தெற்கில் உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் அப்போது பிரித்தனர். அதுவும் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டதே. மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடக போன்ற பகுதிகளிலும் திராவிடம் உள்ளது.

வேலூர் சிப்பாய் புரட்சி வெள்ளையர்களை விரட்ட ஏற்பட்ட புரட்சியாக கருதுகிறேன். சாதி மதத்தை கடந்து போராடியுள்ளனர். இது ஒரு தேசம் தழுவிய போராட்டமாகும். 1806 சிப்பாய் புரட்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் ஆகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x