

கொளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரின் கைபேசி எண் மற்றும் சமூக ஊடக கணக்குகளை முடக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையருக்கு அத்தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர், காவல்துறை ஆணையருக்கு 5-ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலினின், முதன்மை முகவரான வழக் கறிஞர் கிரிராஜன், கொளத்தூர் தொகுதியில், அதிமுக தொண் டர்கள் சிறிய விசிட்டிங் கார்டு அளவிலான டோக்கன்களை விநியோகிப்பதாகவும், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கடந்த 2-ம் தேதி புகார் அளித்தார்.
அதன்பேரில் உடனடியாக நிலையான கண்காணிப்புக் குழுவினர் கொளத்தூர் தொகுதி யில் பல்வேறு இடங்களில் கண்காணித்தனர். அப்போது, அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வீடுவீடாக இந்த டோக்கன்களை விநியோ கித்தது தெரியவந்தது. மக்கா ராம் தோட்டம் பகுதியில் 18 டோக் கன்களை பறிமுதல் செய்தனர்.
இந்த டோக்கன்களை ஆய்வு செய்தபோது, அதில் வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணை 99419 14437 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, ராஜமங்கலம், கொளத்தூர் மற்றும் பெரவள் ளூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குகள் பதியப்பட்டன.
இந்நிலையில், தொடர்ந்து இதுபோன்ற டோக்கன்கள் வழங்கப்படுவதாக, கிரிராஜன் மீண்டும் புகார் அளித்தார். தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க, ஜே.சி.டி.பிரபாகரின் கைபேசி எண், இமெயில், முகநூல் கணக்குகளை முடக்க வேண்டும் என கோரியிருந்தார்.
எனவே, தற்போதைய சூழலை கருத்தில்கொண்டும், புகாரில் முகாந்திரம் இருப்ப தாலும், தேர்தல் நேர்மையாக நடக்க, அந்த கூப்பனில் அளிக் கப்பட்டுள்ள கைபேசி எண்கள், சமூக ஊடக கணக்குகளை மே 19-ம் தேதி வரை முடக்கி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.