பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்களுக்கு தேர்தல் ஆணையம் விதிமுறைகள்

பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்களுக்கு தேர்தல் ஆணையம் விதிமுறைகள்
Updated on
1 min read

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்களுக்கு தேர்தல் ஆணையம் சில விதிமுறைகள் வகுத்துள்ளது.

அதன்படி அச்சு மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அவர்களது சொந்த வாகனங்களில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வர அனுமதியில்லை.

பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் செல்போன்களை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வர அனுமதியில்லை.

கேமரா, வீடியோ கேமரா பயன்படுத்தலாம். ஆனால், செல்போன் கேமரா பயன்படுத்த அனுமதி கிடையாது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் அமைக்கப்பட்டுள்ள மீடியா சென்டரில் பத்திரிகையாளர்கள் தங்கள் செல்போன்களை ஒப்படைக்க வேண்டும்.

ஒவ்வொரு சுற்றுக்குப் பின்னரும் முடிவுகள் மீடியா சென்டரில் அறிவிக்கப்படும். இவ்வாறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in