Published : 29 Jun 2022 07:25 AM
Last Updated : 29 Jun 2022 07:25 AM

இந்திய வனப்பணி இறுதித் தேர்வு: வெற்றி பெற்ற 108 பேரில் 79 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள்

சென்னை: மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான இந்திய வனப்பணி தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 108 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் 79 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் (சென்னை,டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம்) பயின்றவர்கள். இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஸ்ருதி, தமிழக அளவில் முதலிடம் பெற்ற ஆர்.டி.கிருபானந்தன், கர்நாடகா முதலிடம்-வரதராஜ கோயன்கர், ஆந்திரா முதலிடம்-ஏ.பிரபஞ்சன் ரெட்டி, கேரளா முதலிடம்-ஜோஜின் ஆபிரகாம் ஜார்ஜ் ஆகியோர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 8 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்ற 12 மாணவர்களும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்களே.

கடந்த 9 ஆண்டுகளில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 276 பேர் இந்திய வனப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தேசிய அளவில் எந்த பயிற்சி நிறுவனமும் நிகழ்த்தாத சாதனையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x