விஜயகாந்த் உடல்நிலை அவதூறு: யூடியூப் சேனல்கள் மீது புகார்

விஜயகாந்த் உடல்நிலை அவதூறு: யூடியூப் சேனல்கள் மீது புகார்
Updated on
1 min read

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதுாறு பரப்பியயூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கைஎடுக்கக் கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதற்கிடையே நீரிழிவு நோய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் விரல்கள்அகற்றப்பட்டன.

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், ‘மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக சிலயூடியூப் சேனல்கள் வதந்திகளை பரப்பின. இதன் மூலம் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த திட்டமிட்டன. எனவே சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் தொலைகாட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in