கேசினோ புகார்: 3-வது முறையாக புதுவைக்கு வந்து அனுமதியில்லாததால் திரும்பியது சொகுசுக் கப்பல்

கேசினோ புகார்: 3-வது முறையாக புதுவைக்கு வந்து அனுமதியில்லாததால் திரும்பியது சொகுசுக் கப்பல்
Updated on
1 min read

புதுச்சேரி: கேசினோ புகாரால் மூன்றாவது முறையாக புதுச்சேரிக்கு வந்து அனுமதியில்லாததால் சொகுசு கப்பல் திரும்பிச் சென்றது.

சென்னையில் கடந்த 4-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த சொகுசுக் கப்பல் விசாகப்பட்டினம் சென்று 9-ம் தேதி புதுவைக்கு வந்தது.

இதில் இருந்து பயணிகளை இறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் 4 மணி நேரத்தில் புறப்பட்டது. 2-வது முறையாக சொகுசு கப்பல் கடந்த 11-ம் தேதி வந்தது. இதற்கும் அனுமதியில்லை. அதனால் அக்கப்பல் சென்னை சென்றது. இந்த நிலையில் 3வது முறையாக சொகுசு கப்பல் இன்று புதுவை வந்தது.

சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற சொகுசு கப்பல் இன்று காலை புதுவைக்கு வந்தது. கேசினோ போன்ற சூதாட்டங்களுடன் வரும் கப்பலுக்கு அனுமதி இல்லை என ஆளுநர் தமிழிசை திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனால் இன்றும் சொகுசு கப்பல் பயணிகள் இறங்க அனுமதி வழங்கப்படவில்லை.

கடலில் இருந்தபடியே சூரிய உதயத்தை பயணிகள் பார்த்தனர். பின்னர் கப்பல் இங்கிருந்து கிளம்பி சென்னை சென்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in