“காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை... கும்பகோணம் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்” - மநீம

“காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை... கும்பகோணம் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்” - மநீம
Updated on
1 min read

சென்னை: “வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச் சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in