Published : 10 Jun 2022 12:14 AM
Last Updated : 10 Jun 2022 12:14 AM
சென்னை: "தென்னாடுடைய சிவனே போற்றி!" என்று நடராஜர் படத்தை பதிவிட்டு அண்ணமாலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்ய சென்ற இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "மே 23-ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரை திமுக அரசு கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராடினார்கள். கயவனை தண்டிக்காமல், போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலை முற்றுகையிட்டுள்ளது இந்து சமய அறநிலையத் துறை.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் அரசுக்கு என்ன வேலை? தொடர்ச்சியாக ஒரு சமயத்தாரை மட்டும் மனவருத்தத்துக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் இந்த திமுக அரசு செய்யும் காரியங்களைக் கண்டு தமிழக பாஜக அமைதியாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் "தென்னாடுடைய சிவனே போற்றி!" என்று பதிவிட்டுள்ளார். நடராஜர் படத்துடன் இந்த ட்வீட்டை அவர் பதிவு செய்துள்ளது. நடராஜர் படத்திற்கு கீழ் "ஹர ஹர மகாதேவா" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
தென்னாடுடைய சிவனே போற்றி! pic.twitter.com/23yVql7iKg
— K.Annamalai (@annamalai_k) June 9, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT