

முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் எம்.பியுமான மு.தம்பிதுரை ஒரு புகார் மனு அளித்தார். அதில், “தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பொய் குற்றச்சாட்டுகளையும், வதந்திகளையும் பரப்பும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியிருக்கிறார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியும், தேர்தலின்போது கலவரம் ஏற்படுத்தும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது. அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை சென்னை பெருநகர காவல் ஆணைய ருக்கு ராஜேஷ் லக்கானி அனுப்பி இருந்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்துமாறு, அண்ணா சாலை போலீஸா ருக்கு மனு அனுப்பி வைக்கப் பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் முதல்வர் ஜெய லலிதா பற்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசி யிருப்பது உறுதி செய்யப் பட்டது.
அதைத் தொடர்ந்து, அவதூறாக பேசுவது, போராட்டம் நடத்த தூண்டுவது, மிரட்டுவது உட்பட 4 பிரிவுகளின் கீழ் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அண்ணா சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.