Published : 04 Jun 2022 07:06 AM
Last Updated : 04 Jun 2022 07:06 AM
சென்னை: சென்னையில் 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் விவரம்: நீலாங்கரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய சட்டம் ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயகுமார், இசக்கிபாண்டியன், அம்மு ஆகியோர் முறையே கோடம்பாக்கம் சட்டம் ஒழுங்கு, எழும்பூர் குற்றப்பிரிவு, ஆதம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கொத்தவால்சாவடி குற்றப்பிரிவு செல்லப்பா பரங்கிமலை சட்டம் ஒழுங்குக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட சென்னையில் 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT