

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் கட்சியின் தலைவர் நமச்சிவாயம் கூறியதாவது: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை (இன்று) நடைபெற உள்ளது.
இதில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இவ்வாறு தெரிவித்தார்