

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் தற்போது கோயம்பேட்டில் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில் இடவசதி போதிய அளவில் இல்லை.
எனவே, நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.365 கோடி செலவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. ‘சிஎம்ஆர்எல் பவன்’ என்ற பெயரில் இக்கட்டிடம், 12 மாடிகளுடன் ஒரு கட்டிடமும், தலா 6 மாடிகளுடன் 2 கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
6 மாடி கட்டிடத்தில் மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள், தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கட்டிடப் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.