ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்ட வைகை விரைவு ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இடம் பிடிக்க அலைமோதிய பயணிகள் கூட்டம். | படங்கள்: எஸ்.சத்தியசீலன், எம்.முத்துகணேஷ் |

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்ட வைகை விரைவு ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இடம் பிடிக்க அலைமோதிய பயணிகள் கூட்டம். | படங்கள்: எஸ்.சத்தியசீலன், எம்.முத்துகணேஷ் |

Updated on: 
1 min read

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை வரும் திங்கள், செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இன்றுமுதல் செவ்வாய் வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம்

இதனிடையே தமிழக போக்குவரத்து துறை சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 6,199 சிறப்பு பேருந்துகள் என அக்.15 முதல் அக்.18 வரை மொத்தம் 14,963 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் தெற்கு ரயில்வே சார்பில் மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன. அவற்றின் முன்பதிவில்லாத பெட்டிகளில்பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நேற்று முன்தினம் (அக்.15-ம் தேதி) போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட்ட 2,546 பேருந்துகளில், ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேரும், ரயில்களில் ஒரு லட்சம் பேரும் பயணம் மேற்கொண்டனர்.

நேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு அதில் 3 லட்சம் பேரும், ரயில்களில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மொத்தமாக கடந்த இரண்டு நாட்களில் அரசு பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள், தனியார் வாகனங்கள் என 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் மேற்கொண்டனர்.

ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம்

ஆம்னி பேருந்துகளை முன்பதிவு செய்யும் இணையதளங்கள், செயலிகளில் அரசு மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தை விட ரூ.1000 முதல் ரூ.3000 வரை கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டி ருந்தது.

<div class="paragraphs"><p>தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பெண்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்திய ரயில்வே போலீஸார்.      </p></div>

தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பெண்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்திய ரயில்வே போலீஸார்.

இதனிடையே கடந்த 2 நாட்களில் தமிழகம் முழுவதும் 1,222 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. விதி மீறல்கள் கண்டறியப்பட்ட 207 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான்கள் வழங்கப்பட்டது.

விதிமீறல்கள் கண்டறியப்பட்ட வாகனங்களுக்கு ரூ.4,18,700 அபராதமும், ரூ.68,500 இணக்கக்கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலித்த மற்றும் பிற குற்றங்களுக்காக 4 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

<div class="paragraphs"><p>ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்ட வைகை விரைவு ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இடம் பிடிக்க அலைமோதிய பயணிகள் கூட்டம். | படங்கள்: எஸ்.சத்தியசீலன், எம்.முத்துகணேஷ் |</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 17 அக்டோபர் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in