

சென்னை: தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட்டு, புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் - ராமேசுவரம் போட் மெயில் விரைவு ரயில், தாம்பரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில், தாம்பரம் - திருச்சி விரைவு ரயில், மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் - நாகர்கோவில் விரைவு ரயில் ஆகிய 4 ரயில்கள், மறுமார்க்கத்தில் 4 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன.
இந்த ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட உள்ளன. இந்த மாற்றம் ஜன.1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.தெற்கு ரயில்வே கால அட்டவணை மாற்றத்தின் ஒரு பகுதியாக, இந்த 8 ரயில்கள் மாற்றப்பட்டுள்ளன.