

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணைப் பதிவாளர்கள் உட்பட 29 மூத்த நிலை அலு வலர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்கலை. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை அலுவலர்கள், பணியாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சமீ பத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெ.குமார் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற ஓரிரு நாட்களிலேயே நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, தற்காலிக ஊழியர்கள் 136 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத் தியும் மீண்டும் பணியில் சேர்க்கப் படவில்லை. 8 முதல் 10 ஆண் டுகள் வரை பணியில் இருந்து விட்டு தற்போது வேலையிழந்து தவிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பல்கலை.யில் நிர்வாக மறு சீரமைப்பு என்ற பெயரிலும், ஒரே பிரிவில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவதை காரணம் காட்டியும் துணை பதிவாளர்கள், உதவி பதிவாளர்கள், கண் காணிப்பாளர்கள் உட்பட பல் வேறு பிரிவுகளைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் 29 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவில் பதிவாளர் (பொறுப்பு) கையெழுத்திட்டுள் ளார். பல்கலை.யில் ரெகுலர் துறை களில் இருந்து தொலைநிலைக் கல்விக்கும், தொலைநிலைக் கல்வி துறைகளில் ரெகுலர் அலுவலகம் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்குள்ளும் மாற்றம் செய் யப்பட்டுள்ளனர்.
முதுநிலை துணைப் பதிவாளர் சிவகுருநாதன், உதவிப் பதிவா ளர்கள் பிரபாகரன், தமிழ்செல்வி, துளசிராம், ராஜேந்திரன், முது நிலை கண்காணிப்பாளர் சண் முகய்யா, கண்காணிப்பாளர் அகி லன், கல்யாணசுந்தரம், சுந்தர், காசிமுத்து, முனியாண்டி, மெர்சி, செல்விபாண்டி, கார்த்திகேயன், வெங்கடேஷ், முருகன், கோமதி, கார்த்திக் உட்பட உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.