தமிழ்நாடு ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் நியமனம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு ஹஜ் குழுவின் உறுப்பினர்களாக நவாஸ் கனி, எம்பி உட்பட 9 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ‘தமிழ்நாடு ஹஜ் குழுவின் உறுப்பினர்களாக மாநிலங்களவை உறுப்பினர் நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.எம்.என். அசன் மவுலானா, அப்துல் வஹாப், நாகப்பட்டினம் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் மசூதிகள் சங்க தலைவர் எஸ்.சையது முகமது கைப் சாஹிப்கத்ரி, சென்னை அடையாறு கவுரசனி பீர் மஸ்ஜித் தலைமை இமாம் எம்.சைதுதீன் பசில் பாகவி, ஷியா பிரிவு தலைமை காஜி மவுலானா குலாம் முகமது மேதிகான், திருப்பூரைச் சேர்ந்த அல்தாப் உசேன், சென்னையைச் சேர்ந்த குணங்குடி ஆர்.எம்.ஹனீபா, சென்னை புரசைவாக்கம் மசூதி தலைவர் நாகூர் ஏ.எம்.நஜிமுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in