

2012-ல் மதுரை அருகே உள்ள சேது பொறியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த 25 மாணவர்கள் கைகோத்து உருவாக்கியதுதான் ‘படிக்கட்டுகள்’ அமைப்பு. இன்று, இயலாதவர்களுக்கு நிஜப் படிக்கட்டுகளாக நிற்கிறது.
‘படிக்கட்டுகள்’ ஏன் தொடங்கினார்கள்? விளக்குகிறார் அமைப்பின் உறுப்பினர் கிஷோர் குமார். ‘‘விடுமுறை நாட்களில் மாணவர்கள் சினிமாவுக்குப் போவார்கள், விளையாடப் போவார்கள். ஆனால், நாங்கள் வாரக் கடைசியின் 2 நாட்களும் ஆதரவற்றோர் இல்லங்களிலும் முதியோர் இல்லங்களிலும் இருப் போம். ஆதரவற்றக் குழந்தை களுக்கு டியூஷன் எடுப்போம், ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லிக் கொடுப்போம்.
ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்பவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை, தேவைகளை பூர்த்தி செய்வோம். 2 நாள் முழுக்க அவர்களைச் சுற்றியே எங்களது பொழுது கழியும். தீபாவளி, பொங்கலை இவர்களோடுதான் கொண்டாடுவோம். ஆண்டு இறுதி வகுப்பில் எங்களில் 10 பேருக்கு நல்ல கம்பெனிகளில் வேலை உறுதிப்படுத்தப்பட்டது. கல்லூரியை முடித்து வெளியே சென்றுவிட்டால் இந்த உறவு களை எப்படித் தொடருவது என யோசித்தோம். அதற்காக உருவாக்கியதுதான் ‘படிக்கட் டுகள்’ அமைப்பு.
25 பேராகச் சேர்ந்து உருவாக் கிய இந்த அமைப்பில் இப்போது மதுரை, சென்னை, கோவை, ராஜபாளையம் ஆகிய ஊர்களில் 350 பேர் உறுப்பினர்கள். இவர் களில் 150 பேர் பெண்கள். சென்னை புழலில் உள்ள வள்ளலார் ஆதர வற்றக் குழந்தைகள் இல்லத் தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் குழந்தைகள் அழுக் காகிக் கிடந்தார்கள். அங்கே போர்வெல் அமைப்பதற்கு ரூ.50 ஆயிரம் தேவைப்படும் என்று சொன்னார்கள். முக நூலில் எங்களது சேவையையும் தேவை யையும் சொன்னோம். ஒரே வாரத்தில் ஐம்பதாயிரம் சேர்ந்தது. அதை வைத்து, போர்வெல் அமைத்துக் கொடுத்தோம்.
எங்களில் 300 பேர் மாதச் சம்பளம் பெறுகிறவர்கள். ஒவ் வொருவரும் தங்களது ஊதியத் திலிருந்து மாதம் ஐந்நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை படிக் கட்டுக்கு தந்துவிடுவார்கள். அதைக் கொண்டு மாதம் ஒரு ஆதரவற் றோர் இல்லத்துக்கும் முதியோர் இல்லத்துக்கும் தேவையானதைச் செய்து கொடுப்போம். மதுரை ரிசர்வ் லைன் அன்பகம் இல் லத்தில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகள் மேஜிக் பார்க்க ஆசைப்பட்டார்கள். அவர்களுக் காகவே ஒரு ’மேஜிக் ஷோ’வை ஏற்பாடு செய்தோம்.
உறவுகளை தொலைத்துவிட்ட ஆதரவற்றக் குழந்தைகளுக்கும் உறவுகளால் தொலைக்கப்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கும் நாங்கள் உறவுகளாக இருக்க நினைத்தோம். அதற்காகவே அன்னையர் தினம், தியாகிகள் தினம், குழந்தைகள் தினம், தீபாவளி, பொங்கல் இந்த நாட்களை எல்லாம் அவர்களோடு கொண்டாடினோம். தீபாவளிக்கு அந்தக் குழந்தைகளுக்கு புத் தாடை எடுத்துக் கொடுத்து பட்டாசு வாங்கிக் கொடுப்போம். அவர்க ளுக்கு மகனாக, மகளாக, அண்ண னாக, அக்காவாக இத்தனை பேர் இருக்கிறோம் என்பதை அந்த ஜீவன்களுக்கு புரிய வைத்தோம்.
ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளின் தனித் திறமையை வளர்ப்பதற்காக அவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளை வைத்து, அவர்களுக்குப் பயன்படும் பெட்ஷீட், துண்டு சோப்பு இவை களை பரிசாகக் கொடுப்போம். எங்களைப் போல கல்லூரி மாணவர்களை பெரிய எண்ணிக் கையில் ஒரு அணியாக திரட்டி அவர்கள் அத்தனை பேரையும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் சேவை செய்ய வைக்கவேண்டும். சாலையோர ஆதரவற்றோரை அரவணைப்பதற்காக மதுரையில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றைத் தொடங்க வேண்டும். இப்போது 2 ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து படிக்க வைக்கி றோம். இனிமேல் ஆண்டுக்கு 10 குழந்தைகளை தத்து எடுத்து படிக்கவைக்க வேண்டும்’’ என மெய்சி லிர்க்க வைத்தார் கிஷோர் குமார்.
’ஆதரவற்றோரை அரவணைப் போம்.. ஆதரவற்றோர் என்ற சொல்லையே அகராதியிலிருந்து நீக்குவோம்.. ஆதரவற்றோருக்கு அன்னையாவோம்’ என்று சொல்லும் ’படிக்கட்டுகள்’ எளி யோரை சிகரம் தொட வைக்கட் டும். (படிக்கட்டுகள் தொடர்புக்கு.. 9677983570)