

தொடர் மின்வெட்டைக் கண்டித்து, விருதுநகரில் நேற்று முன்தினம் இரவு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் அண்மைக் காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இந்நிலையில், ஐயனார் நகர், கலைஞர் நகர் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும், இரவு நேரத்தில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்வெட்டு ஏற்படுவதாகவும் கூறி, அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பர்மா காலனி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேசிய மேற்கு போலீஸார், மின்வாரிய அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.