

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு வாய்ப்பு உள்ளது என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் டி.முருகேசன் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர சிறப்பு அதிரடிப்படை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த ஆந்திர காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு, அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணை யத்திடம் அளித்துள்ளது.
இதுபற்றி சென்னை விமான நிலையத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் டி. முருகேசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை ஆணையத்திடம் கொடுத்திருப்ப தாக தகவல் வந்துள்ளது. நான் டெல்லிக்கு சென்றதும் அந்த அறிக் கையை பார்ப்பேன். அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றம் சொல்லி விட்டால், எங்களுடைய பரிந்துரை யின்படி சிபிஐ விசாரணை வைக் கக்கூட வாய்ப்பு உள்ளது” என்றார்.