திண்டுக்கல் | யானை மிதித்து வேட்டை தடுப்பு காவலர் உயிரிழப்பு

திண்டுக்கல் | யானை மிதித்து வேட்டை தடுப்பு காவலர் உயிரிழப்பு
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம் பண்ணைப்பட்டி பகுதியில் ஒற்றை யானை ஒன்று விளைநிலப் பகுதிக்குள் வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்களை, அப்பகுதிக்கு அனுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர். அப்போது குயவநாயக்கன் பட்டியை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் சுந்தரமூர்த்தி(51) அடர்ந்த பகுதிக்குள் சென்று யானையை விரட்ட வெடி வைத்துள்ளார். இந்த சத்தம் கேட்டு யானை மிரண்டு வந்து வெடிவைத்த சுந்தரமூர்த்தியை முட்டி தள்ளி மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கன்னிவாடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in