கடலோரப் பகுதிகளில் இன்று வெப்பம் தணிந்து காணப்படும்

கடலோரப் பகுதிகளில் இன்று வெப்பம் தணிந்து காணப்படும்
Updated on
1 min read

கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பம் சற்று தணிந்து காணப்படும். இருப்பினும் காற்றில் ஈரப்பதம் இருப்பதால் புழுக்கம் அதிகமாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. கடலோரப் பகுதிகளில் வெப்பக் காற்று வீசியதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் கடலோரப் பகுதிகளில் நாளை (ஏப்.26) வெப்பம் சற்று தணிந்து காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் பாலச்சந்திரன் கூறியதாவது:

மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும். அதே நேரத்தில் கட லோர மாவட்டங்களில் தெற்கு மற் றும் தென்கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் கடந்த சில நாட்களில் இருந்ததைவிட வெப்பம் சற்று தணிந்து காணப்படும். நேற்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மதுரை மற்றும் தரும புரியில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவானதே அதிக பட்ச வெப்பமாக இருந்தது. அப்போது இரண்டு நகரங்களிலும் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் பதிவானது. நேற்று மதுரையில் 41.3 டிகிரி செல்சியஸும், தரும புரியில் 42.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை 40 டிகிரி செல்சியஸில் இருந்து வெப்பம் 36 டிகிரியாக வெப்பம் குறையும். இருப்பினும் காற்றில் ஈரப்பதம் இருப்பதால் புழுக்கம் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

தர்மபுரி, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், சேலம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 8 நகரங்களில் நேற்று வெப்பம் 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டி பதிவானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in