மமக வேட்பாளர்கள் ஏப். 13-ம் தேதி அறிவிப்பு

மமக வேட்பாளர்கள் ஏப். 13-ம் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே வீரசோழனில் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறும்போது, ‘‘திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், நாகப்பட்டினம், தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இதில் 5 தொகுதிகளில் நிறுத்தப்படக்கூடிய வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை (ஏப்ரல் 13-ம் தேதி) வேட்பாளர்களின் அறிவிப்போம். மது ஒழிப்பு போராளி சசிபெருமாள், மதுக்கடைகளை மூடுமாறு பாடிய மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவனை அதிமுக அரசு கைது செய்தது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கூறிய அதிமுக அரசு தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் எனக் கூறியிருப்பது திமுக கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in