Published : 02 Apr 2022 08:55 AM
Last Updated : 02 Apr 2022 08:55 AM
உதகை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர்கள் மதிக்க வேண்டுமென, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் அறிவுறுத்தினார்.
உதகை மருந்தியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் ஆளுநருமான சதாசிவம் கலந்துகொண்டார். பின்னர்அவர் கூறும்போது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர்கள் மதிக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
பாகுபாடு கூடாது
நீர்வளம் அனைவருக்கும் பொதுவானது. அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், மாநில அரசுகள் நடந்துகொள்ளவேண்டும். கிழக்கு, தெற்கு, வடக்கு என்று பாகுபாடு கூடாது. நீட் தேர்வை பொறுத்தவரை, பல்வேறு கோரிக்கைகளை தமிழகமுதல்வர் வலியுறுத்தி வருகிறார். மாணவர்களும் நீட்தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்களின் வேந்தர், துணை வேந்தர்களை தேர்வு செய்யும்போது பல அறிஞர்களை கலந்தாலோசித்துதான் நியமிக்க வேண்டும். அதே சமயத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர்கள் மரியாதை கொடுக்க வேண்டும்.
நான் கேரளாவில் ஆளுநராக இருந்தபோது, நான், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மூன்று பேரும் ஒரே காரில் பயணித்தோம். பிரதமர் மோடியே இதை பாராட்டினார்”.
இவ்வாறு அவர் கூறினார்.
துணைவேந்தர்களை தேர்வு செய்யும்போது பல அறிஞர்களை கலந்தாலோசித்துதான் நியமிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT