அமைச்சர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதனை நீக்க வேண்டும்: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

அமைச்சர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதனை நீக்க வேண்டும்: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
Updated on
1 min read

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மின்துறை அமைச்சர் பதவியிலிருந்து நத்தம் விஸ்வநாதனை நீக்க வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யாவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:

எல்லா துறை களிலும் லஞ்சம் தலைவிரித்தாடு கிறது. சத்துணவு அமைப்பாளர் முதல் துணைவேந்தர் நியமனம் வரை எங்கும் ஊழல், எல்லாவற்றுக்கும் கமிஷன் என்பது எழுதப்படாக விதியாகிவிட்டது.

தனியாரிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் வாங்கியதில் முறை கேடுகள் நடைபெற்றிருப்பதாக கடந்த ஆண்டே ஆதாரங்களுடன் நான் குற்றம்சாட்டியிருந்தேன். ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6.41 விலையில் வழங்க 52 நிறுவனங் கள் முன்வந்த நிலையில் ரூ. 7.01 விலையில் தமிழக அரசு வாங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரியஒளி மின் திட்டத்துக்காக தனியார் நிறுவனத்துக்கு நிலம் வழங்கியதிலும் மின் துறை அமைச்சர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். விவசாயிகள் நிர்பந்தம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கியதில் சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூத்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீதான விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டு மானால் அவரை பதவியில் இருந்த ஆளுநர் நீக்க வேண்டும். இல்லையேல் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். திமுக அரசு பொறுப்பேற்றதும் தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை பெற்றுத் தருவோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு புகழாரம்

விழுப்புரம் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ‘எனக்கு நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும், 93 வயது ஆவதால் ஓய்வெடுக்குமாறு சிலர் கூறுவதாகவும், ஆனால் 103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன்’ என்றும் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று கோவை வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம், கருணாநிதி கூறியது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன் என கருணாநிதி பேசியது, அவரது மன வலிமையையும், இளமையும் காட்டுகிறது’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in