தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்
சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: " தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகம் . புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

26 மற்றும் 27ம் தேதிகளில் தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. 28ம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in