வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.58,214 கோடிக்கு 78 ஒப்பந்தம் கையெழுத்து

200 நாட்களில் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு
முதல்வர் விஜய் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் அமைச்சர்கள் கீர்த்தனா, முகமது பர்வேஸ், தலைமைச் செயலாளர் சாய்குமார், துறை செயலாளர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் விஜய் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் அமைச்சர்கள் கீர்த்தனா, முகமது பர்வேஸ், தலைமைச் செயலாளர் சாய்குமார், துறை செயலாளர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated on: 
2 min read

சென்னை: வெற்றி தமிழ்​நாடு முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் 65,786 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், ரூ.58,214 கோடி மதிப்​பிலான 78 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி உள்​ளன. இதன் மூலம் கடந்த 200 நாட்​களில் ரூ.1.73 லட்​சம் கோடி முதலீடுகள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்​ப​தற்​கும் புதிய வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வதற்​கும் தொழில் துறை சார்​பில் பல்​வேறு நட​வடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அதன் ஒரு பகுதி​யாக ‘வெற்றி தமிழ்​நாடு முதலீடு மற்​றும் செய​லாக்க மாநாடு 2026’ சென்​னையை அடுத்த கோவளத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த மாநாட்​டுக்கு முதல்​வர் விஜய் தலைமை வகித்தார்.

தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா, தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் முகமது பர்​வேஸ், தலை​மைச் செயலர் சாய்​குமார், தொழில் துறை செயலர் விஜயகுமார், தமிழ்​நாடு வழிகாட்டி நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் தீபக் ஜேக்​கப், செயல் இயக்​குநர் பல்​லவி வர்மா, தொழில் நிறு​வனங்​களின் பிரதி​நி​தி​கள் மற்​றும் அரசு உயர் அலு​வலர்​கள் பங்​கேற்​றனர்.

ஏற்​கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கிண்​டி​யில் நடை​பெற்ற வெற்றி தமிழ்​நாடு முதலீட்​டாளர்​கள் முதல் மாநாட்​டில், ரூ.67,452 கோடிக்கு 97 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 2-வது மாநாட்​டில், ரூ.58,214 கோடி முதலீட்​டில் 65,786 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில் 78 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் முதல்​வர் விஜய் முன்​னிலை​யில் கையெழுத்​தாகின.

நிகழ்ச்​சி​யில், ரூ.7,925 கோடி முதலீட்​டில் 19,965 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் 15 புதிய தொழில் திட்​டங்​களுக்கு முதல்வர் விஜய் அடிக்​கல் நாட்​டினார். மேலும், ரூ.1,430 கோடி முதலீட்​டில் 1,710 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் 6 முடிவுற்ற திட்​டங்​களை​யும் அவர் தொடங்கி வைத்​தார். மேலும், யுபிஎஸ், ஆட்​டோலிவ், ஸ்​டைல்​கோவ், மஹிந்​திரா அண்ட் மஹிந்​திரா, ஓம்​ரான் ஆகிய நிறு​வனங்​களில் தேர்வு செய்​யப்​பட்ட 18 பேருக்கு பணி நியமன ஆணைகளை​யும் வழங்​கினார்.

குறிப்​பாக, தென் கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ நிறு​வனம், கிருஷ்ணகி​ரி​யில் ரூ.250 கோடி​யில் எஃகு பதப்​படுத்​தும் தொழிற்​சாலையை அமைக்க உள்​ளது. ராயல் என்ஃபீல்டு நிறு​வனம் தமிழகத்​தில் ரூ.1,000 கோடி முதலீட்​டில் மின்​சார இரு சக்​கர வாகன உற்​பத்தி ஆலையை அமைக்க உள்​ளது.

ஹூண்​டாய் நிறு​வனத்​துக்கு உதிரி பாகங்​கள் வழங்​கும் ஹுவாஷின் ஆட்​டோமோட்​டிவ் மற்​றும் சியோன் இ-ஹ்வா சம்​மிட் நிறு​வனங்​கள் முறையே ரூ.850 கோடி, ரூ.520 கோடி முதலீட்​டில் விரிவாக்​கப் பணிகளை மேற்​கொள்ள உள்​ளன. ஸ்வீடனைச் சேர்ந்த பிஎம்சி ஹைட்​ராலிக்ஸ் நிறு​வனம், கிருஷ்ணகி​ரி​யில் ரூ.300 கோடி​யிலும், ஜே.கே. ஃபென்​னர் நிறு​வனம் சிவகங்​கை​யில் ரூ.900 கோடி​யிலும் புதிய ஆலைகளை அமைக்க உள்​ளன.

பிரேசிலைச் சேர்ந்த டபிள்​யூஇஜி நிறு​வனம் தரு​மபுரி​யில் ரூ.2,000 கோடி​யில் உற்​பத்தி ஆலையை விரிவாக்​கம் செய்ய உள்​ளது. ரானா செமி கண்​டக்​டர்ஸ் நிறு​வனம் கிருஷ்ணகி​ரி​யில் ரூ.150 கோடி​யில் தொழிற்​சாலை அமைக்க உள்​ளது. தமிழகத்​தின் முன்​னணி ஜவுளி நிறு​வனங்​களான ராம்​ராஜ், எஸ்சிஎம், அவனீதா, கேபிஆர் உள்​ளிட்ட நிறு​வனங்​களும் முதலீட்டு ஒப்​பந்​தங்​களில் கையெழுத்​திட்​டுள்​ளன.

ஜவுளித் துறை உள்​ளிட்ட திட்​டங்​கள் மூலம் ரூ.3,928 கோடி முதலீட்​டில் 14,650 பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். மேலும், ரூ.15,250 கோடி​யில் 12 பல்​முனை சரக்​குப் போக்​கு​வரத்​துப் பூங்​காக்​கள் அமைக்​கப்​பட உள்​ளன. தொழில் வளர்ச்​சி​யில் பின்​தங்​கிய சிவகங்கை, தரு​மபுரி, விருதுநகர், கடலூர், விழுப்​புரம், ராம​நாத​புரம், திரு​வண்​ணா​மலை, தேனி உள்​ளிட்ட 25 மாவட்​டங்​களில் புதிய முதலீடுகள் மேற்​கொள்​ளப்​பட உள்​ளன. இதில் 18 ஒப்​பந்​தங்​கள் மூலம் ரூ.17,413 கோடி முதலீட்​டில் 16,411 பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

பிரேசில், பின்​லாந்து, ஜெர்​மனி, சிங்​கப்​பூர், தென் கொரியா, ஸ்வீடன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 நிறு​வனங்​கள் ரூ.14,798 கோடி அந்​நிய நேரடி முதலீடு செய்ய உள்​ளன. இது​த​விர, சிவகங்கை மாவட்​டம் கானாடுகாத்​தானில் ட்​ரோன் உற்​பத்தி, தொழில்​நுட்ப மேம்​பாடு, சோதனை மற்​றும் பயிற்​சிக்​கான பிரத்​யேக தொழில்​துறை மையம் அமைக்க ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

தமிழக உற்​பத்​தி​யாளர்​கள், நெசவாளர்​கள் மற்​றும் தொழில்​முனைவோரின் பொருட்​களைச் சர்​வ​தேச சந்​தையில் விற்​பனை செய்ய அமேசான் செல்​லர் சர்​வீசஸ் நிறு​வனத்​துடனும் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. இதன்​படி, தகுதி​யுடைய புதிய ஏற்​றுமதி​யாளர்​களுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்​பிலான சலுகைகள் வழங்​கப்​பட உள்​ள​தாக தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

அந்த வகை​யில், மொத்​தம் கையெழுத்​தான 78 ஒப்​பந்​தங்​களில் 58 புதிய தொழில் திட்​டங்​களுக்​கானவை. 18 ஒப்​பந்​தங்​கள் ஏற்​கெனவே உள்ள தொழிற்​சாலைகளின் விரிவாக்​கத்​துக்​கானவை. 2 ஒப்​பந்​தங்​கள் புதிய முதலீடு மற்​றும் விரிவாக்​கம் ஆகிய இரண்​டையும் உள்​ளடக்​கிய கலப்​புத் திட்​டங்​களாகும்.

இந்த மாநாட்​டுக்கு முன்பு மேற்​கொள்​ளப்​பட்ட ஒப்​பந்​தங்​களை​யும் சேர்த்து, 200 நாட்​களில் மொத்​தம் 190 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மூலம் ரூ.1.73 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மான முதலீடுகள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் 1,98,557 பேருக்கு வேலை​வாய்ப்பு உறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் கீர்த்​தனா பேசுகை​யில், “கடந்த மே மாதம் 23 துறைகளில் ரூ.1.14 லட்​சம் கோடி மதிப்​பிலான 112 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. இதன் மூலம் 1.32 லட்​சம் வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும். தற்​போது நடை​பெற்ற மாநாட்​டில் ரூ.58,214 கோடி மதிப்​பிலான மேலும் 78 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இவற்​றின் மூலம் 65,786 பேருக்கு வேலை​வாய்ப்​பு​கள் கிடைக்​கும். இந்த ஒப்​பந்​தங்​களில் 13 நிறு​வனங்​கள் முதல் முறை​யாக தமிழகத்​திலும், 4 நிறு​வனங்​கள் முதல் முறை​யாக இந்​தி​யாவிலும் தங்​கள் முதலீடுகளை மேற்​கொள்ள உள்​ளன. இதன் மூலம் தமிழகத்​தில் மொத்த முதலீடு ரூ.1.73 லட்​சம் கோடி​யாகவும், புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களின் எண்​ணிக்கை 190 ஆகவும் உயர்ந்​துள்​ளது” என்​றார்.

<div class="paragraphs"><p>முதல்வர் விஜய் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் அமைச்சர்கள் கீர்த்தனா, முகமது பர்வேஸ், தலைமைச் செயலாளர் சாய்குமார், துறை செயலாளர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p></div>
திருப்பரங்குன்றம் தீபத்தூண் அரசியலில் சிக்கவைக்கப்பட்ட மதுரை ஆட்சியர்

X