

சென்னை: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தைக் கைவிடும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வி.கே.சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தால், ஏராளமான ஏழைப் பெண்கள் வாழ்வில் ஒளி ஏற்றப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டத்தை கைவிடுவதாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மூலம் தெரியவருகிறது. பெண் பிள்ளைகளின் திருமணக் கனவு திமுக அரசின் நிதிநிலை அறிக்கையால் தகர்ந்துவிட்டது. தங்கத்தால் தாலியை அணிவது தமிழகப் பெணகளின் சுயமரியாதை மற்றும் தமிழ்ப் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவே இருந்து வருகிறது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும். இது ஏழைப் பெண்களுக்கு எதிரான முடிவாகும். எனவே, திமுக அரசு இந்த முடிவை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்து, தொடர்ந்து தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சாதாரன மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.