மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பு பரிசு கூப்பன்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பு பரிசு கூப்பன்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் 54.41 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் சுமார் 10.50 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஆதரவு அளித்து வரும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய திட்டங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. பயணிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலானபரிசு கூப்பன்களை வழங்கவுள்ளது.

இந்த புதிய திட்டங்கள் வரும் 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும். இதுதவிர மேலும் 30 நாட்களுக்கான விருப்பம் போல் பயணம் செய்வதற்கான பயண அட்டை (ரூ.2,500 மற்றும் ரூ.50 வைப்புத்தொகை மதிப்பு) வழங்கப்படும்.

மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளைத் தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தப்படும். அதில்10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை வாங்கிய 10 பயணிகளை தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தப்படும். இதில், குறைந்தபட்ச தொகையான ரூ.500-க்கு டாப் அப் செய்திருந்தால் ரூ.1450 மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும். பயணிகளை ஊக்குவிக்கவும் இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரிசுவிவரங்கள் குறித்து மேலும் தகவல்களை பெற அனைத்து மெட்ரோரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in