Published : 19 Mar 2022 04:46 PM
Last Updated : 19 Mar 2022 04:46 PM

இயற்கை வேளாண்மை முதல் டிஜிட்டல் விவசாயம் வரை: தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 சிறப்பு அம்சங்கள்

சென்னை: 2022-23-ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகா, ஆந்திராவுக்குப் பின் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த வேளாண் பட்ஜெட்டில் மொத்த நிதி ஒதுக்கீடு - ரூ.33,007.68 கோடி. சென்ற 2021-22-ஆம் ஆண்டின் திருந்திய மதிப்பீடு - ரூ.32,775.78 கோடி ஆகும். வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்:

> கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு. அனைத்துத் துறை திட்டங்களையும் ஒருங்கிணைத்து. (1997 கிராம பஞ்சாயத்துகள் 2021-22)

> முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தில் 3,000 மானாவாரி நிலத் தொகுப்புகளில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறுவதற்கு ரூ.132 கோடி.

> இயற்கை வேளாண்மை, இடுபொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.71 கோடி மதிப்பில் மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.

> பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட ரூ.2,546 கோடி நிதி ஒதுக்கீடு.

> சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகள் இயக்கம்

  • இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்,
  • திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு முதல் மண்டலம்,
  • தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு இரண்டாவது மண்டலம்,
  • துவரைப் பயிருக்கென சிறப்பு மண்டலம் (கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களைக் கொண்டது)
  • சிறுதானியங்களின் ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழாக்கள்,
  • சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளுக்கு விதை முதல் விற்பனைக்கு ரூ.152 கோடியில் உதவி.
  • சூரியகாந்தி மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்தி எண்ணெய் வித்துக்களை ரூ.29.7 கோடிக்கு ஊக்குவித்தல்.

> ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்

  • அனைத்து கிராம நிலங்களுக்கும் புவியிடக்குறியீடு,
  • புதிய பயிர்த் திட்டத்திற்கான பரிந்துரை,
  • பூச்சி மற்றும் நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு,
  • ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி,
  • நீர்ப்பாசனத்தில் தானியங்குமயமாக்கலுக்கு நவீன இணையதள தொழில்நுட்பம் (Internet of Things)
  • மண் வள அட்டைகளுக்கான தமிழ் மண் வளம் இணையமுகப்பு,
  • பயிர் சாகுபடிப் பரப்பினை கணிக்க தொலை உணர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்,
  • இடுபொருட்கள், விதைகள் மற்றும் கன்றுகளை ஆன்லைனில் பதிவு செய்து விநியோகம்,
  • வேளாண் விரிவாக்க மையங்ளில் பணமில்லா பரிவர்த்தனை.

> மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனை கூடம்

> உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க ரூ.5 கோடி

> பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக ரூ.5 கோடி

> கரும்பு விவசாயிகளுக்கு உதவி

  • மெட்ரிக் டன்னுக்கு ரூ.195/- சிறப்பு ஊக்கத்தொகை - கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,950/-
  • கரும்பு சாகுபடிக்கு உதவி - ரூ.10 கோடி
  • சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் & தானியங்கி எடைகள் – ரூ.4.5 கோடி

> மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவி ரூ.20 கோடி ஒதுக்கீடு

> தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க - ரூ.30 கோடி

> தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங்களில் ஊடுபயிருக்காக ரூ.27.51 கோடி.

> பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து தோட்டம் (Vertical garden) போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி

> தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10.25 கோடி

> உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி

> காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி

> பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி

> பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடி

> பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி

> முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகள் - ரூ.65.34 கோடி மற்றும் 145 சூரியசக்தி உலர்த்திகள் ரூ.3 கோடி

> 50 உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ. 15 கோடி மற்றும் 10 உழவர் சந்தைகளை அமைக்க ரூ.10 கோடி

> ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள், பயறுவகைகளை விற்பனை செய்ய அனுமதி.

2022-23 தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

> மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கு முன்னுரிமை.

  • திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் ரூ.381 கோடியில் மூன்று மிகப்பெரிய அளவிலான உணவுப் பூங்காக்கள்,
  • கிராம அளவிலான மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் மையங்கள் 38 கிராமங்களில் அமைக்க ரூ. 95 கோடி
  • 3 கோடியில் 5 தொழில் கற்கும் சிறுமையங்கள்.
  • 295 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைப்பதற்கு ரூ.5 கோடி.

> சென்னை மற்றும் திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகங்கள் அமைக்க ரூ. 15 கோடி

> பொது, தனியார் பங்கேற்பு முறையில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் " மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைத்து, அருகாமையில் உள்ள மாநில வியாபாரிகள் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வசதி.

> மாநில அளவிலான "உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேலாண்மை மையம்" அமைத்து வணிக நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல்

> ஆறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 36 கோடி.

> பெரம்பலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தருமபுரி, விருதுநகர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இரண்டாம் கட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.125.44 கோடி

> 60 ட்ரோன்களை வாங்குவதற்கும் பயிற்சி மற்றும் செயல்விளக்கத்திற்கு ரூ 10.32 கோடி

வேளாண் சார்ந்த துறைகளின் செயல்பாடுகள்

> காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 80 கோடி.

> அயிரை, செல் கெண்டை மற்றும் கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு ரூ.5 கோடி.

> விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க TANGEDCO விற்கு ரூ.5,157.56 கோடி.

> ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள்.

> விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கிமீ நீளத்தில் சாலைகள்,.

> தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டத்தின் மூலம் மூன்று இலட்சம் வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு ரூ.42.07 கோடி,

> வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு,

> சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்.

> திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிட்கோ) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை,

> வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் வேளாண் வணிக ரீதியான முயற்சிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி

> வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணித்தல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x