Published : 14 Mar 2022 07:33 AM
Last Updated : 14 Mar 2022 07:33 AM

திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் திறப்பு: பயணிகள் வரவேற்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் தடத்தில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால், பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில், திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பணிகள் நிறைவு செய்யப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நேற்றுமுதல் மெட்ரோ ரயில்கள் நின்று செல்கின்றன. விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளத

இணைப்பு வாகன வசதி தேவை

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘வடசென்னையில் முக்கிய இணைப்பு வசதியாக வண்ணாரப்பேட்டை - விம்கோநகர் மெட்ரோ ரயில் வசதி இருக்கிறது. இருப்பினும், இந்த தடத்தில் திருவொற்றியூர் தேடி மற்றும் விம்கோநகர் பணி மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்காததால், மக்கள் வேறொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி செல்வதால் பயணிகள் சிரமப்பட்டனர்.

தற்போது 2 மெட்ரோ ரயில் நிலையங்களும் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. கூடுதலாக இணைப்பு வாகன வசதியை ஏற்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x